உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடுதல் விலைக்கு விற்ற உரக்கடைக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்ற உரக்கடைக்கு தடை

தேனி, : ஆண்டிப்பட்டியில் விவசாயிக்கு யூரியா உரத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கடையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து புகார் உறுதியானதால் அந்த உரக்கடைக்கு தடை விதித்தனர்.மாவட்டத்தில் 77 வேளாண் கூட்டுறவு கடன்சங்கங்கள், 227 உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு யூரியா, பொட்டாஸ், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் உர கடையில் குறிப்பிட்ட விலையை விட கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்ததாக கலெக்டர் ஷஜீவனாவிற்கு புகார் வந்தது. கலெக்டர் உத்தரவில் கலெக்டர் நேர்முக உதவியாளர் தனலட்சுமி தலைமையில் வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு பிரசன்னா, ஆண்டிப்பட்டி வேளாண் அலுவலர் கண்ணன் உரக்கடையில் ஆய்வு நடத்தினர். கூடுதல் விலைக்கு உரம் விற்றது உறுதி செய்யப்பட்டது.மேலும் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 10,260 கிலோ உரத்தை விற்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் உரம் கிடைப்பதில் பிரச்னை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரம் பதுக்கல் உள்ளிட்ட புகார்களை 94432 32238 என்ற அலைபேசில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை