உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எரிந்த நிலையில் ஆண் பிணம்

எரிந்த நிலையில் ஆண் பிணம்

கூடலுார்: குமுளி வனப்பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.குமுளி மலைப்பாதை வன காளியம்மன் கோயில் அருகே வனப்பகுதிக்குள் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. ஒரு வாரத்திற்கு மேலானதால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடலுக்கு அருகில் காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்கள், லைட்டர் கிடந்தது. லோயர்கேம்ப் போலீசார் கேரளாவில் உள்ள ஸ்டேஷன்களில் காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். சமீபத்தில் கம்பம் மெட்டு வனப்பகுதியில் கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !