உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உத்தமபாளையம் கல்லுாரியில் தடய அறிவியல் பயிலரங்கு

உத்தமபாளையம் கல்லுாரியில் தடய அறிவியல் பயிலரங்கு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில், 'தடய அறிவியலில் மூலக் கூறுகளின் பயன்பாடு' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.இப்பயிலரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் எச்.முகமது மீரான் தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் ஆரிபா பானு வரவேற்றார்.கோவை வி.ஜெ.பயோடெக் ஆய்வகத்தின் இயக்குனர் விஜயகுமார் பேசியதாவது:செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ரத்தத்தின் மாதிரிகள்,கைரேகைகளை ஆராயும் முறைகள், மரபணுக்களின் புறத்தோற்றம், மூலக்கூறுகளை ஆராயும் நவீன கருவிகளான 'பயோ சென்சார்', இம்யூனோகுரோமடோகிராபி,கார்பன் டாட் துகள்கள், ஓ மிக்ஸ் தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கி, நவீன உலகில் நடைபெறும் குற்றங்களை கண்டுபிடிக்க தடய அறிவியல் துறை மிகப்பெரிய பங்காற்றி வருவதாகவும், புலனாய்வுஅமைப்புக்களுக்கும், விசாரணை ஏஜென்சிகளுக்கும் இத்துறை உதவி செய்து வருகிறது.,என்றார். உதவி பேராசிரியர் ராஜா நன்றிதெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரிக்கும், வி.ஜெ. பயோடெக் ஆய்வகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திரளான மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை