| ADDED : மார் 16, 2024 06:30 AM
போடி : போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர்.பெரியகுளம்: ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் தனித்தனி சன்னதியில், தலா ஒரு கொடிமரம் அமைந்துள்ளது.கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று (மார்ச் 15) கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 24 வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஹோமம் பூஜைகள் நடந்தது.கொடி மரத்தில் விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.