உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.பல ஆயிரம் மதிப்பில் வாங்கிய ரேக்கு கள் வீணாகும் அவலம்

ரூ.பல ஆயிரம் மதிப்பில் வாங்கிய ரேக்கு கள் வீணாகும் அவலம்

போடி : போடி தாலுகா அலுவலத்தில் ரூ.பல ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட இரும்பு ரேக்குகள் பயன்பாடு இன்றி வெயில், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகும் நிலையில் உள்ளன.போடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு பதிவேடுகள் மழை, வெயிலில் நனையாத வகையில் பாதுகாப்புக்காக வைத்திருப்பதற்கு ரூ.பல ஆயிரம் மதிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் ரேக்குகள் வாங்கப்பட்டன. வாங்கிய சில நாட்கள் மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டன. தற்போது பயன்படுத்தாமல் தாலுகா அலுவலக மொட்டை மாடியில் பாதுகாப்பு இன்றி கீழே போட்டு வைத்துள்ளனர். பலமாதங்களாக இவை வெயில், மழையால் நனைந்து ரேக்குகள் துருப்பிடித்து வீணாகும் நிலை உள்ளது. ரூ.பல ஆயிரம் மதிப்புள்ள அலுவலக பயன்பாட்டிற்கு வாங்கிய ரேக்குகளை பயன்பாடு இன்றி காய்லாங் கடைக்கு போகும் நிலையில்மாறி வருகிறது. பயன்பாட்டிற்கு தேவை இல்லை என்றால் மாவட்ட நிர்வாகம் தேவையுள்ள அலுவகலங்களுக்கு வழங்கலாம். அல்லது ஏலம் விட்டு அரசின் நிதி இழப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை