உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேசிய ஒற்றுமை தின நடைபயணம்

 தேசிய ஒற்றுமை தின நடைபயணம்

தேனி: மத்திய அரசின் விளையாட்டு இளைஞர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும், எனது இளைய பாரதம் சார்பில் தேனி ஒன்றியம், நாகலாபுரம் பாரதிய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின நடைபயணம் நடந்தது. நிகழ்வின் நேரு யுவகேந்திரா அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் துவக்கி வைத்தார். பள்ளி துணை முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோகுல கிருஷ்ணன் செய்தார். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் சித்த மருத்துவமனை அருகே நிறைவடைந்தது. ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை