உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கூடலுார்: கூடலுார் திருவள்ளுவர் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தலைமையாசிரியர் அதிபர் முன்னிலையில், செயலாளர் மூர்த்திராஜன் துவக்கி வைத்தார். அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் கற்பனை மற்றும் அறிவியலைக் கலந்து 150க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர். சூரிய சக்தி பயன்பாடு, நீர் சுழற்சி, எளிய மின்சாரம் தயாரிக்கும் முறைகள், தானியங்கி நீர்ப் பாசன முறைகள், அன்றாட வாழ்வில் பயன்படும் அறிவியல் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன. இதில் பாலிதீன் மறுசுழற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த படைப்புகள் அனைவரையும் கவர்ந்தன. ஆசிரியர்கள் குழு, மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். சிறந்த அறிவியல் படைப்புகளை மற்ற பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லும் விதமாக வட்டார அறிவியல் கருத்தரங்கை ஏற்பாடு செய்ய பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் ஜெயந்த்குமார், ஜெயசித்ரா, இமானுவேல், ஒருங்கிணைப்பாளர் கனியமுது செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை