உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குண்டும், குழியுமான தேனி ஒன்றிய அலுவலக ரோடு

குண்டும், குழியுமான தேனி ஒன்றிய அலுவலக ரோடு

தேனி : தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள முல்லை நகர் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் தேனி ஊராட்சி ஒன்றிய தற்காலிக அலுவலகம் செயல்படுகிறது. இப் பகுதியில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வசிக்கின்றனர். மேலும் ஒன்றிய அலுவலத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் பல்வேறு காரணங்களுக்கா வந்து செல்கின்றனர். முல்லை நகர் மெயின் ரோடு இரு புறத்திலும் இந்திரசேணை தெருக்கள் ஒன்று முதல் 11 வரை அமைந்துள்ளன. இந்த ரோடு அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. டூவீலர்களில் வருவோர், நடந்து செல்லும் முதியோர் பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ரோடு சரியில்லை என்றால் ஒன்றிய அலுவலர்களிடம் முறையிடுவார்கள். ஆனால் ஒன்றிய அலுவலர்கள் தினமும் வந்து செல்லும் ரோடு பயன்படுத்த லாயக்கற்ற ரோடாக இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ரோட்டினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ