உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  புயலால் வாழைகள் சேதம்: இலை விலை தாறுமாறு

 புயலால் வாழைகள் சேதம்: இலை விலை தாறுமாறு

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், புயலால் வாழைகள் சேதமடைந்ததால், இலை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம், வீரவநல்லுார் மற்றும் தாமிரபரணி கரையோரங்களிலும், துாத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும் அதிக அளவில் வாழை விவசாயம் நடக்கிறது. சில தினங்களுக்கு முன் பலத்த மழை பெய்ததோடு, சூறாவளி வீசியதால் கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் பகுதிகளில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால், வாழைகளில் இருந்து இலைகளை கொண்டு வர முடியவில்லை. இதனால் நேற்று, திருநெல்வேலி டவுன் மார்க்கெட்டில், 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு, 4,500 ரூபாய்க்கு விற்பனையானது. வழக்கமாக, 200 இலைகள் கொண்ட கட்டு, 500 ரூபாய்க்கு விற்பனையாகும். தற்போது, 10 மடங்கு விலை உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை