உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆட்டோ கவிழ்ந்ததில் 5ம் வகுப்பு மாணவன் பலி

ஆட்டோ கவிழ்ந்ததில் 5ம் வகுப்பு மாணவன் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ - மாணவியரை ஏற்றிச் சென்ற ஆட்டோ, நேற்று காலை அகஸ்தியர்பட்டி அருகே திடீரென கவிழ்ந்தது. இதில், விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் பிரதீஷ், 10, சம்பவ இடத்திலேயே பலியானார்.ஆட்டோவில் பயணம் செய்த ஆறு மாணவர்கள் காயமுற்றனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் ஆட்டோ டிரைவர் அடையகருங்குளத்தைச் சேர்ந்த சுந்தரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி