உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  கார் கம்பெனி மேலாளரை தாக்கியவர் சிறையிலடைப்பு

 கார் கம்பெனி மேலாளரை தாக்கியவர் சிறையிலடைப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பழைய கார்களை விற்கும் நிறுவனத்திற்குள் புகுந்து, மேலாளர் உள்ளிட்டவர்களை தாக்கியதோடு பொருட்களை சூறையாடிய இன்னொரு நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் சுசி என்ற பெயரில், பயன்படுத்திய கார் விற்பனை நிறுவனம் உள்ளது. அதுபோல, திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் சேவியர் காலனி அருகே, பழைய கார் விற்பனை நிறுவனத்தை ராபின்சன், 41, என்பவர் நடத்தி வருகிறார். அவர் நேற்று, சுசி நிறுவனத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேலாளர் சுப்ரமணியன், ஊழியர்களை தாக்கியதோடு பேன், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை தரையில் போட்டு உடைத்தார்; அங்கு நிறுத்தியிருந்த கார்களையும் சேதப்படுத்தினார். சுப்ரமணியன் புகாரில், திருநெல்வேலி மாநகர போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ராபின்சனை நேற்று கைது செய்தனர். அவருடன் வந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை