உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம்

 நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நவ., 4ல் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்ஸவம் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. மணக்கோலத்தில் காந்திமதி அம்மன் எழுந்தருளினார். தங்க பல்லக்கில் சுவாமி நெல்லையப்பர் மேளதாள நாதம் முழங்க ஆயிரங்கால் மண்டபம் வந்தார். பின் மாப்பிள்ளை அழைப்பு சடங்கு நடந்தது. அதையடுத்து சுவாமி - அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் முடிந்து வேதமந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். மஹாதீபாராதனை முடிந்து பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் திருமண விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சுவாமி அம்மன் பூம்பல்லக்கில் பட்டண பிரவேசம் வீதி உலா நடந்தது. நேற்று முதல் நவ., 17 வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி