உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மற்றவர்கள் வெற்றி பெற்றால் சாதாரண நிகழ்வு; நாங்கள் வெற்றி பெற்றால் சரித்திரம்:சீமான்

மற்றவர்கள் வெற்றி பெற்றால் சாதாரண நிகழ்வு; நாங்கள் வெற்றி பெற்றால் சரித்திரம்:சீமான்

திருநெல்வேலி: ‛‛ தேர்தலில் வெற்றி பெற்றால் அது சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சியின் வெற்றி சரித்திரம்'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருநெல்வேலியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, ஆலங்குளத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. ஒற்றைக் கட்சி ஆட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர். அதிகார பரவலாக்கம் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், அது ஒரு சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அது சரித்திரம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி மலர நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும். ஹிந்தி அறிந்தவர்கள் மட்டும் பிரதமர் ஆகவும், அமைச்சர் ஆகவும் இருந்து நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வது ஜனநாயக விரோதம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 29, 2024 18:49

இவர் திமுகவின் B Team அதனால் இவர் ஜெயித்தால் நிச்சயம் சரித்திரம் தான் ஏனெனில் இவரே இவர் கட்சிக்கு வாக்கு கேட்க மாட்டார் தனக்கு தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவர் இவர் கட்சி நிற்கும் இடங்களில் திமுக வெற்றி பெறும்


vijay
மார் 29, 2024 12:28

இல்லை இல்லை பிரபாகரன் பெயரை சொல்லியும், உனது கேனத்தனமான திட்டங்களை சொல்லி உனது கட்சி வெற்றிபெறுவது என்பது சரித்திரம் அல்ல "தரித்திரம்" வென்றது என்று சொல்லிக்கொள்ளலாம்


Nagercoil Suresh
மார் 29, 2024 12:07

இன்னும் நல்லா பேசு என நினைத்து தான் மைக் சின்னத்தை கொடுத்திருப்பார்கள் ஆனால் மைக் இல்லாத மேடை கிடையாதுபிரதமர் கூட மைக் சின்னத்தை வைத்து தான் ஓட் கேட்கிறார் என கூவப் போகிறார் சீமான்


Sampath Kumar
மார் 29, 2024 11:57

unnmai seeman katchi oru idathil ventral pothum tamil nattil arsyil kalammaari vidum appuram seeman range vaera


குமரி குருவி
மார் 29, 2024 11:51

உன் சொந்த சரித்திரம் நாறுதே..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை