உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரக்குறைவாக பேசிய போலீசார் ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்

தரக்குறைவாக பேசிய போலீசார் ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மூன்று நாட்களாக ஆட்டோ, கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் திருத்தணி நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு இருக்கும் வாகனங்கள் மட்டுமே மலைக்கோவில் மற்றும் திருத்தணி நகரத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்து வருகின்றனர்.நேற்று காலை ஆட்டோ ஓட்டுனர்கள், பக்தர்கள் மற்றும் பொது மக்களை மலைக்கோவிலுக்கு ஏற்றிச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், போலீசார் அனுமதி வழங்காததால், திருத்தணி - சித்தூர் சாலையில் போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர், ஆட்டோ ஓட்டுனரை தரக்குறைவாக பேசியதாக கூறி, 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேச்சு நடத்தினர். பின், பக்தர்களை ஏற்றிச் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி