| ADDED : ஜூன் 24, 2024 11:39 PM
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே, பெரம்பூர் கிராமம், பாஞ்சாலி நகரில் வசித்து வருபவர் மணிகண்டன், 30வேன் ஓட்டுனர். சென்னை மணலியில் உள்ள மாமியார் வீட்டிற்கு மனைவி குடும்பத்துடன் சென்றார்.நேற்று வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைத்து அதில் 5 சவரன் நகை, 900 கிராம் வெள்ளிப் பொருட்கள், 2 லட்சம் ரூபாய் மற்றும் வீட்டின் வெளியே விட்டு சென்ற பைக் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.