உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிமென்ட் சாலை சீரமைப்பு

சிமென்ட் சாலை சீரமைப்பு

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, 110 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.நேற்று முன்தினம் காந்திரோடு பிரதான சாலையில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக சிமென்ட் சாலையை சேதப்படுத்தி குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் முறையாக சாலையை சீரமைக்காமல் அரைகுறையாக விட்டனர்.இதனால், அவ்வழியாக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள், பயனாளிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தவறி விழுந்து வந்தனர். சிலர் சிறு சிறு காயமடைந்து வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் காந்திரோடு பிரதான சாலையில் சேதப்படுத்தியசாலை முறையாக சீரமைக்கப்பட்டது. தற்போது, வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை