மேலும் செய்திகள்
ரூ.7.50 லட்சம் கஞ்சா அம்பத்துாரில் சிக்கியது
19-Oct-2025
நிழற்குடை முன் கழிவுநீர் நோய் பரவும் அபாயம்
19-Oct-2025
துார்வாராத கழிவுநீர் கால்வாயால் அபாயம்
19-Oct-2025
இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்
19-Oct-2025
திருத்தணி:ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் அனில், 32. இவருக்கு அஞ்சலி, 27 என்ற மனைவியும், சூர்யா, 3 என்ற மகனும் உள்ளனர்.நேற்று காலை சூர்யாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, அனில் தன் காரில், மனைவி, குழந்தையுடன் சென்னை சென்றனர். காரை உறவினர் பாஸ்கர் என்பவர் ஓட்டிச் சென்றார்.திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ, கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19-Oct-2025
19-Oct-2025
19-Oct-2025
19-Oct-2025