உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்திற்கு வேலி அமைப்பு வருவாய் துறை விசாரணை

நிலத்திற்கு வேலி அமைப்பு வருவாய் துறை விசாரணை

திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் உமா, 40. இவர் தன் விவசாய நிலத்திற்கு கால்நடைகள் மற்றும் ஆட்கள் செல்லாதவாறு வகையில் தடுப்பு வேலி அமைக்க தீர்மானித்து, சாலையோரம் சிமென்ட் கம்பங்களை நேற்று நடவு செய்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் மதியழகன் உத்தரவின்படி செருக்கனுார் வருவாய் ஆய்வாளர் வித்யாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின் சாலையை ஆக்கிரமித்து கம்பங்கள் நடவு செய்யக்கூடாது என வருவாய் துறையினர் பணியை தடுத்து நிறுத்தினர். நடப்பட்ட கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என, தெரிவித்தனர்.இதையடுத்து உமா, தன் பட்டா நிலத்தில் தான் சாலையே செல்கிறது, சாலையை ஆக்கிரமிக்கவில்லை என அதற்கான ஆவணங்கள் காண்பித்தார். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் வித்யாலட்சுமி, சர்வே செய்த பின் தான் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி