மேலும் செய்திகள்
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
4 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) திருவள்ளூர்
4 hour(s) ago
கடம்பத்துார்:கடம்பத்துாரைச் சேர்ந்தவர் கார்த்தி, 38. விடையூர் செல்லும் சாலையில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் வளர்க்கும் இரு ஆடுகள், சில நாட்களுக்கு முன் 3, 2 என, ஐந்து குட்டிகளை ஈன்றன.கடந்த 26ம் தேதி இரவு இவரது வீட்டிலிருந்த இரண்டு தாய் ஆடுகள் திருடப்பட்டன. கடம்பத்துார் காவல் நிலையத்தில், கார்த்தி புகார் அளித்தார். அன்று இரவே, திருடிய ஆடுகளுடன் 'ஸ்பிளண்டர்' பைக்கில் கசவநல்லாத்துாரில் சென்ற மர்ம நபர்களை, போலீசார் மடக்கினர். மர்ம நபர்கள், ஆடுகளையும், பைக்கையும் விட்டு தப்பி ஓடிவிட்டனர். பீதியில் இருந்த ஆடுகள், இருட்டில் காணாமல் போயின. போலீசார், பைக்கை மட்டும் மீட்டனர். இந்நிலையில், 'ஐந்து குட்டிகளை ஈன்ற இரு ஆடுகளை காணவில்லை' என, அதன் உரிமையாளர் கார்த்தி, ஆடுகளின் புகைப்படங்களுடன் கடம்பத்துார் முழுதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். அதில், ஆடுகளை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் தரப்படும் எனவும், அவர் அறிவித்துள்ளார்.
4 hour(s) ago
4 hour(s) ago