உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில ஆணழகன் போட்டி குமரி வீரர் மிஸ்டர் தமிழ்நாடு

மாநில ஆணழகன் போட்டி குமரி வீரர் மிஸ்டர் தமிழ்நாடு

சென்னை: செங்கல்பட்டில் நடந்த, மாநில ஆணழகன் போட்டியில், 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டத்தை கன்னியாகுமரி வீரர் கைப்பற்றினார்.தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் சார்பில், மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது.செங்கல்பட்டு, மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் போட்டிகள் நடந்தன.இதில், 8 வயது பிரிவில் பாடி பில்டிங், பெண்களுக்கான உமன் பிசிக்ஸ், ஆண்களுக்கு இரு பிரிவிலும் மென் பிசிக்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு உட்பட, மொத்தம் 14 வகை போட்டிகள் நடத்தப்பட்டன.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட மாநில முழுதும் இருந்து, 202 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, கட்டுடலை காட்டி அசத்தினர்.அனைத்து போட்டிகளின் முடிவில், ஒட்டுமொத்த 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டத்தை, கன்னியாகுமரி வீரர் மரியஜோன் என்பவர் கைப்பற்றி, 25,000 ரொக்கப் பரிசை வென்றார்.ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடம் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூசன் என்பவருக்கு, 10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.தவிர, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடங்களை பிடித்த வீரருக்கு, தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை