மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
18 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
18 hour(s) ago
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
18 hour(s) ago
ஊத்துக்கோட்டை : திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் நடுவே பூண்டி கிராமத்தில் கடந்த, 1944ம் ஆண்டு கட்டப்பட்டது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து முக்கிய நீர் ஆதாரம். மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் நிரம்பி இருந்தது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, அங்குள்ள இணைப்பு கால்வாய் மூலம் சென்னை புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இதன் நீர்மட்டம், 'கிடுகிடு'வென சரிந்தது. நேற்று காலை, 06:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில், 0.978 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 25.93 அடி.அங்குள்ள இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு, 485 கன அடி வீதம் திறக்கப்பட்டு, சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. பேபி கால்வாயில் வினாடிக்கு, 13 கன அடி திறக்கப்பட்டு சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.கடந்தாண்டு இதே நாளில், நீர்த்தேக்கத்தில், 1.1 டி.எம்.சி., நீர் இருந்தது. நீர்மட்டம், 27.20 அடி. தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால், நீர்மட்டம் மிகுந்த கவலை அளிப்பதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago