உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முருக்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 34. லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணியளவில் திருப்பாச்சூர் அருகே லாரியில் வந்த போது அப்பகுதியில் உள்ள புறவழிச்சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு மொபைல் போனை சார்ஜரில் போட்டு விட்டு துாங்கி விட்டார். பின் காலை 5:30 மணியளவில் எழுந்து பார்த்த போது மொபைல்போன் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில் திருடியது திருப்பாச்சூர் பெரிய காலனியைச் சேர்ந்த செல்வகுமார், 34 என தெரிந்தது. போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை