உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள்: விவசாயிகள் கலக்கம்

விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள்: விவசாயிகள் கலக்கம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சியில் கூடல்வாடி பட்டரை ஏரி அருகே 150 ஏக்கர் நிலத்தில் மூன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது.இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் காட்டுப்பன்றிகள் தொல்லை உள்ளதால் விவசாயிகள் நெருப்பை எரியூட்டியும் காவலுக்கு ஆட்களை வைத்தும் தங்கள் விளை நிலங்களை பாதுகாத்து வருகின்றனர்.இந்நிலையில் பகல் நேரங்களில் வளர்ப்பு பன்றிகள் வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வதாக புலம்புகின்றனர்.தற்போது கிராமம் முழுதும் 1500க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரியும் நிலையில் அப்பன்றிகள் கிராமங்களில் திரிவதுடன் தற்போது உணவை தேடி ஏரி, விளைநிலங்களில் திரிகின்றன. அப்படி திரியும் பன்றிகள் கூட்டமாக வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாலங்காடு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை