மேலும் செய்திகள்
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
4 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) திருவள்ளூர்
4 hour(s) ago
திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகவதி பட்டாபிராமபுரம் கிராமத்தில் 1,000திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.பின் ஊராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டிக்கிடந்த சுகாதார வளாகம் தற்போது பாழடைந்து வருகிறது.இந்நிலையில் சுகாதார வளாகம் இல்லாததால் அப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது.கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சுகாதார வளாகங்களை கட்டிக்கொடுக்கும் நிலையில், பல ஊராட்சிகளில் இதுபோன்று சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி உள்ளது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago