உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தவர் சிவசந்திரன், 54. இவரும், மறுவாழ்வு முகாமை சேர்ந்த மகேந்திரன், தீபன், ரமேஷ் ஆகியோர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, செயின்ட் மேரிஸ் பள்ளி முதல் குறுக்குத் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை நேற்று மேற்கொண்டனர்.அப்போது, அந்த தெருவில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிவசந்திரன் சிக்கிக் கொண்டு பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி