உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வியாபாரியை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த கிழச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். 43. பழைய பொருள்கள் வியாபாரம் செய்து வரும் இவரது கடைக்கு நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் வந்த இருவர் ஆபாசமாக பேசி கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 500 ரூபாயை பறித்து சென்றனர்.இதுகுறித்து அந்தோணிராஜ் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் அந்தோணிராஜிடம் பணம் பறித்தவர்கள் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வினித்குமார், 27, மிதுன்சக்ரவர்த்தி, 32 என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை