உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிக்கன் கடை உரிமையாளர் வீட்டில் 49 சவரன் திருட்டு

சிக்கன் கடை உரிமையாளர் வீட்டில் 49 சவரன் திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை பகுதியில் உள்ள ஸ்ரீராம் கார்டன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக், 32; சிக்கன் கடை நடத்திவருகிறார். இரு மாதங்களுக்கு முன், வீட்டை பூட்டிக்கொண்டு அவரது தாயின் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றிருந்தார். கடந்த 12ம் தேதி வீட்டிற்கு வந்த கார்த்திக், மறுநாள் மீண்டும் கேரளா புறப்பட்டு சென்றார்.இடைப்பட்ட நாட்களில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், தனி அறையில் இருந்த மூன்று பீரோக்களை உடைத்து, 49 சவரன் நகைகள், 600 கிராம் வெள்ளி பொருட்கள், 8,000 ரூபாயை திருடி சென்றனர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, மின் விளக்குகள் எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், கார்த்திக்கிடம் தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி