உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்

திருப்போரூர், திருப்போரூர் கந்தன் வழிபாட்டு மன்றத்தினர் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், பச்சை நிற மாலையணிந்து, இரண்டு மாதங்கள் கிரிவலம் வருவர். பொங்கல் நாளில் பால்குடம் எடுத்து கந்தனுக்கு அபிஷேகம் செய்வர்.இந்தாண்டு, பொங்கல் விழாவையொட்டி நேற்று முன்தினம், காலை 10:00 மணியளவில், நான்கு கால் காவடி மண்டபத்திலிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம் கிழக்கு, தெற்கு மாடவீதிகள், அய்யம்பேட்டை தெரு, செங்கல்பட்டு சாலை, கிரிவல சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது.உற்சவர் மண்டபத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமிக்கு பால்குட அபிஷேகம் செய்தனர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதாலும், பொங்கல் விடுமுறை என்பதாலும், கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் வர ஆரம்பித்தனர். நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி