உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று மாட்டு பொங்கல் விழாவை ஒட்டி மூலவருக்கு, அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை 6:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது. பொதுவழியில் ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாட்டு பொங்கலை ஒட்டி உற்சவர் முருகர் மேல்திருத்தணியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காணும் பொங்கலை ஒட்டி திருத்தணி நகரம் முழுதும் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கார், வேன், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை