உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

அரக்கோணம்:அரக்கோணம் காந்தி நகர் அண்ணா குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கர் கிரி, 49. இவர் அரக்கோணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்தார்.இவர் நேற்று காலை நடைபயிற்சி செல்வதற்காக அந்த பகுதியின் அருகே உள்ள, அரக்கோணம் -- திருத்தணி ரயில் மார்க்கமாக உள்ள தண்டவாளத்தை கடந்தார். அப்போது சென்னையில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் கிரி உயிரிழந்தார்.அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்