உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலையாற்றில் குப்பை கழிவுகள் விதிமீறி கொட்டும் ஊராட்சி நிர்வாகம்? கூவம் ஆறாக மாறும் அவலநிலை

கொசஸ்தலையாற்றில் குப்பை கழிவுகள் விதிமீறி கொட்டும் ஊராட்சி நிர்வாகம்? கூவம் ஆறாக மாறும் அவலநிலை

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு சேகரமாகும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள், வி.ஜி.கே.புரம் கொசஸ்தலையாற்றில், திருவாலங்காடு சாலையில் உள்ள பழைய தரைப்பாலம் அருகே கொட்டப்படுகின்றன.இதனால், கொசஸ்தலையாறு மாசடையும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டால், நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன் நீரின் சுவை, நிறம், தன்மை மாறும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, கனகம்மாசத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஆற்றின் நீர்வழித்தடத்திலேயே டிராக்டர் வாயிலாக, குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து கேட்டால், ஊராட்சி நிர்வாகம் கொட்ட சொல்வதாக கூறுகின்றனர். தற்போது, குப்பையை கொட்டிவிட்டு, பின் தீயிட்டு கொளுத்தி விட்டு செல்கின்றனர். தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டால், கொசஸ்தலையாறு கூவம் ஆறாக மாறும் அபாய நிலை உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்