உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாயில் முளைக்கும் ஆக்கிரமிப்பு பஞ்செட்டி கிராமத்தினர் புகார் மனு

கால்வாயில் முளைக்கும் ஆக்கிரமிப்பு பஞ்செட்டி கிராமத்தினர் புகார் மனு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தச்சூர் கிராமத்தில், ஆரணி ஆற்றிற்கு மழைநீர் செல்லும் ஓடைக்கால்வாயை ஆக்கிரமித்து தனிநபர்கள் சிலர் வீட்டுமனைகளை அமைப்பதாகவும், அதை அகற்றக்கோரி நேற்று பஞ்செட்டி கிராமவாசிகள் வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:பொன்னேரி அடுத்த தச்சூர் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு அருகில் ஓடைக்கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. அதனருகில் காவலர் குடியிருப்பு கட்டடங்களும் உள்ளன.தற்போது, இந்த ஓடைக்கால்வாயின் அருகில் உள்ள நில உரிமையாளர்கள், வீட்டு மனைகளை அமைத்து வருகின்றனர். ஓடைக் கால்வாயையும் ஆக்கிரமித்து வீட்டுமனைகள் அமைக்கப்படுகிறது.இதனால், மழைக்காலங்களில் கால்வாயில் மழைநீர் செல்ல வழியின்றி, அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பஞ்செட்டி, தச்சூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை மூழ்கடிக்கும் நிலை உள்ளது. ஓடைக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக கிராமவாசிகள், பொன்னேரி பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும் நேற்று புகார் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை