உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருவள்ளூர்:திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு விழா, நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, வெற்றி பெற்றோருக்கு பேனா, புத்தகம் வழங்கி பாராட்டி பேசியதாவது:தேசிய அளவில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும், திறனறித் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 8,833 பேர் எழுதினர். அதில், 164 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக மாதம் 1,000 ரூபாய் விதம் 9-12ம் வகுப்பு வரை, 48 மாதம் வழங்கப்படும்.மாநில அளவில், முதல், 23 இடங்களில் ஆர்.கே.பேட்டை வட்டம், சந்திரவிலாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை