உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில்வே நிலத்தில் வசிப்பவர்கள் மாற்று இடம் கேட்டு மறியல்

ரயில்வே நிலத்தில் வசிப்பவர்கள் மாற்று இடம் கேட்டு மறியல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில்வே நிலையத்தின் இருபுறத்திலும், ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான, 2.26 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதில் நுாறுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று ரயில்வே நிர்வாகம், ஆக்கிரமிப்புகள் அகற்ற உள்ளனர். மாற்று இடம் தராமல் அகற்றக்கூடாது என அங்கு வசிப்பவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், ரெட்டம்பேடு சாலை சந்திப்பில், 50 பேர் சாலையை மறித்து அமர்ந்தனர். மாற்று இடம் தராமல் வீடுகளை இடிக்கக் கூடாது என கோஷமிட்டனர்.தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார், சமாதானம் பேசினர். ஏற்க மறுத்ததால் அனைவரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி