| ADDED : ஜன 27, 2024 01:34 AM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுார் பஞ்சாயத்தில் காவனுார், நரசிங்கபுரம், காவனுார் காலனி , சில்வர் பேட்டை, ஷா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார், 15,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இதில் காவனுார் காலனி பகுதியில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாகவும். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக செய்து தருவதில்லை.இப்பகுதிக்கு என அரசு பள்ளி, ரேஷன் கடை இல்லை, மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 100 நாள் வேலை திட்டம், மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு முறையாக கடன் வழங்குவதில்லை. மேலும் ஊராட்சி நிர்வாகத்தால் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதால் காவனுார் பஞ்சாயத்தில் இருந்து பிரித்து காவனுார் காலனியை தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி காவனுார் காலனி பேருந்து நிறுத்தத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர்.