உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய வேன் பறிமுதல்

மணல் கடத்திய வேன் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் ஏரியில் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது டாடா சரக்கு வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினர்.போலீசார் சென்று பார்த்தபோது அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் கொடுத்த புகார்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பியோடிய உரிமையாளர் வேலு மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை