உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நத்தமேடு சுடுகாடில் சுற்றுச்சுவர் அமைப்பு

நத்தமேடு சுடுகாடில் சுற்றுச்சுவர் அமைப்பு

திருவள்ளூர்:'நம் நாளிதழ்' செய்தி எதிரொலியாக, நத்தமேடு ஆதிதிராவிடர் காலனியில், 19.70 லட்சம் ரூபாய் மதிப்பில், சுடுகாடு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.திருவள்ளூர் ஒன்றியம், நத்தமேடு ஊராட்சி, 2வது வார்டுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனி மக்களுக்காக, 72 சென்ட் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இங்கு சுற்றுச்சுவர் இல்லாமல், புதராகக் காட்சியளிக்கிறது. மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, உறவினர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்த சுடுகாட்டை பராமரித்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக, 19.77 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் 205 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுடுகாட்டில் சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, அப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ