உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துர்நாற்றம் வீசும் குப்பை கழிவுகள் சிறுவாபுரி பக்தர்கள் முகம் சுளிப்பு

துர்நாற்றம் வீசும் குப்பை கழிவுகள் சிறுவாபுரி பக்தர்கள் முகம் சுளிப்பு

சிறுவாபுரி:சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலானோர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முருகனை தரிசிக்க வருகின்றனர்.சென்னையில் இருந்து வருபவர்கள், தச்சூர் மேம்பால இறங்கும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை வழியாக சிறுவாபுரி செல்வது வழக்கம். அந்த இடைப்பட்ட சாலை, ஆண்டார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரவள்ளூர் கிராமத்திற்கு உட்பட்டது.ஊராட்சியில் சேகரமாகும் கழிவுகள், இணைப்பு சாலையோரம் குவிக்கப்பட்டு வருவதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் கடுமையான சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, முகம்சுளிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, அப்பகுதியை துாய்மையாக வைத்திருக்க, ஆண்டார்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ