உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்றுத்திறனாளிகள் அணுகல் குறித்த பயிற்சி

மாற்றுத்திறனாளிகள் அணுகல் குறித்த பயிற்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உலகளாவிய அணுகல் தன்மை குறித்த ஒரு நாள் பயிற்சி நடந்தது.கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:தமிழக அரசு, உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவையை வழங்கி அவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் மேம்படுத்திட இயலும். மேலும் இதன் ஒரு அங்கமாக அனைத்து அரசு, தனியார் அலுவலகம், பொது இடம், திரையரங்கு, பூங்கா, சுற்றுலா மற்றும் ஆன்மிக தலம், வியாபார அங்காடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வழிவகை செய்ய வேண்டும். இதற்காக, மாவட்ட துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தபயிற்சி நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தமிழக உரிமைகள் திட்ட அலுவலர் ராஜலட்சுமி பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை