உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பாசி படர்ந்த பாதையில் வழுக்கி விழும் பயணியர்

 பாசி படர்ந்த பாதையில் வழுக்கி விழும் பயணியர்

ஊத்துக்கோட்டை: பூண்டி கிராமத்தில் உள்ள தொல்லியல் துறையின் பழங்கால பூங்காவிற்கு செல்லும் பாதை, பாசி படர்ந்துள்ளதால் சுற்றுலா பயணியர் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதையை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொல்லியல் துறை சார்பில், பழங்காலத்தை விளக்கும் வகையில், பூண்டி கிராமத்தில், 1985ம் ஆண்டு தொல் பழங்கால அகழ்வைப்பகம் செயல்பட்டு வருகிறது. பழங்கால மனிதர்களின் வேட்டையாடும் முறை குறித்து விளக்கும் வகையில், அவர்கள் பயன்படுத்திய கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு செல்லும் பாதை முழுதும் பாசி படர்ந்து உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், இந்த பாதையில் நடக்க முடியாத நிலை உள்ளது. சிலர் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பூண்டியில் உள்ள தொல் பழங்கால பூங்கா செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை