உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓட்டுப்பதிவு 40 சதவீதமாக சரிந்த இடங்களில்...சிறப்பு கவனம்!:2,628 சாவடிகளில் 60 சதவீதத்திற்கும் குறைவு

ஓட்டுப்பதிவு 40 சதவீதமாக சரிந்த இடங்களில்...சிறப்பு கவனம்!:2,628 சாவடிகளில் 60 சதவீதத்திற்கும் குறைவு

சென்னை:சென்னையின் மூன்று தொகுதிகளில் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், 2,628 ஓட்டுச் சாவடிகளில், 60 சதவீதத்துக்கும்கீழ் ஓட்டு பதிவாகி உள்ளது. மேலும், 74 ஓட்டுச் சாவடிகளில், 40 சதவீதத்துக்கும்கீழ் ஓட்டு பதிவாகி இருப்பதால், அந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப் பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக, இந்திய தேர்தல் கமிஷனிடம், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 72.44 சதவீதம் ஓட்டு பதிவானது. அதேநேரம், மிகக் குறைந்த அளவாக சென்னை மாவட்டத்தில் 60.16 சதவீதம் மட்டுமே பதிவாகி, கடைசி இடம் பிடித்தது.படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் அதிகம் இருந்தும், சென்னை மக்கள், ஜனநாயக கடமையை செய்ய தவறி வருகின்றனர்.அதற்கு அடுத்தடுத்து நடந்த 2021 சட்டசபை தொகுதி தேர்தலில், சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதமும், 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 43.65 சதவீதம் என தொடர்ந்து, சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்து வருகிறது.சென்னையில் ஓட்டு சதவீதம் குறைய, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, வாடகை வீட்டில் இருப்போர், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதி பகுதியில் வாடகைக்கு சென்றால், வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றாமல் இருப்பது மற்றும் தேர்தல் நேரத்தில் பழைய இடத்திற்கு சென்று ஓட்டளிக்காமல் இருப்பது உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது.அதேபோல், பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதும், சுற்றுலா செல்வதும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மீதான அதிருப்தி, சுட்டெரிக்கும் வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஓட்டு சதவீதம் குறைந்ததாக தெரியவந்தது. இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், 2019 லோக்சபா தேர்தலில் எந்தெந்த பகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைந்தது; அங்கு 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:சென்னை மாவட்டத்தில், 2019 தேர்தலில், 10 இடங்களில் 60 சதவீதத்திற்கும் கீழ் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. குறிப்பாக, 74 ஓட்டுச்சாவடிகளில், 40 சதவீதத்திற்கு கீழ் பதிவாகி இருந்தது.அதேபோல், 676 ஓட்டுச்சாவடிகளில் 50 சதவீதத்திற்கு கீழ் பதிவானது. 1,888 ஓட்டுச்சாவடிகளில் 60 சதவீதத்திற்கும் கீழ் ஓட்டுகள் பதிவானது. மொத்தம், 2,628 ஓட்டுச்சாவடிகளில் மிகக் குறைந்த அளவில் ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது.சட்டசபை தொகுதி வாயிலாக அந்த இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, வரும் தேர்தலில் அப்பகுதியில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள், இசை நிகழ்ச்சிகள் என, பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், ஓட்டுச்சாவடி இடங்களில் குடிநீர், கழிப்பறை, பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர் நேரில் வந்து ஓட்டளிக்கும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே, இத்தேர்தலில் சென்னை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓட்டு சதவீதம் குறைந்த ஓட்டுச்சாவடிகள்

தொகுதி ஓட்டுப்பதிவு சதவீதம் 40 சதவீதம் 50 சதவீதம் 60 சதவீதம் வில்லிவாக்கம் 56.91 5 27 135துறைமுகம் 57.08 1 18 98தி.நகர் 57.44 1 23 133வேளச்சேரி 57.78 0 28 138சைதாப்பேட்டை 57.81 5 32 125ஆயிரம் விளக்கு 57.84 5 25 110விருகம்பாக்கம் 58.24 1 26 132அண்ணா நகர் 58.68 4 16 129மயிலாப்பூர் 58.70 2 22 129சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 59.70 1 8 102திருவொற்றியூர் 0 0 11 115 சோழிங்கநல்லுார் 55.51 10 226 500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை