| ADDED : ஜன 25, 2024 10:56 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பகுதி வாரியாக குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக வார்டுகள் தோறும் சபை கூட்டம் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள, 15 வார்டுகளில், நேற்று, 11 வார்டுகளில் கூட்டம் நடத்தப்பட்டது. எஞ்சிய வார்டுகளில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பகுதிவாசிகள் பங்கேற்று குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.ோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் தீர்மானங்களாக தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், செயல் அலுவலர் சதீஷ் தலைமையில் வார்டு கவுன்சிலர் கூட்டம் நடந்தது. அந்தந்த வார்டுகளில் உள்ள பகுதிவாசிகள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். மொத்தம், 15 வார்டுகளில், சாலை, கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.