மேலும் செய்திகள்
மாணவியிடம் சில்மிஷம் பாதிரியார் மீது போக்சோ
25-Nov-2025
துாத்துக்குடி: டாஸ்மாக் பாரில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக, தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். 'மனைவி மற்றும் மகன் இருப்பிடத்தை கூறாததால், ஆத்திரத்தில் இருவரையும் வெட்டிக் கொன்றேன்' என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன், 60, மற்றும் மந்திரம், 50, ஆகியோர் கடந்த 25ம் தேதி இரவு தளவாய்புரம் டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது குடித்து கொண்டிருந்த போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறில் முருகன் சகோதரியின் கணவர் கோமு, 61, என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை தேடி வந்த நிலையில், செட்டிகுறிச்சி பகுதியில் பைக்கில் சென்றபோது நேற்று போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், 'கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்து, குடும்பத்துடன் வாழ விரும்பினேன். 'மனைவி தங்கத்தாய், மகன் மாடசாமி ஆகியோர் வெளியூருக்கு சென்றுவிட்டனர். அவர்களது இருப்பிடத்தை கேட்டபோது முருகனும், மந்திரமும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். 'மனைவி மற்றும் மகன் எங்கு இருக்கின்றனர் என தெரிந்திருந்தும், என் குடும்பம் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களது முகவரியை தர மறுத்து விட்டதால், இருவரையும் கொலை செய்தேன்' என, போலீசில் கோமு கூறியுள்ளார். போலீசார் இடமாற்றம் ஏரல் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலர் அருண்குமார், 32, போலீஸ்காரர் அஜ்மீர் காஜா முகைதீன், 29, ஆகியோர், தங்களது வாட்ஸாப் ஸ்டேட்டஸ் பகுதியில், இருவர் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்படும் வீடியோவை வைத்திருந்தனர். தகவல் தெரிய வந்ததும் அவர்கள் இருவரையும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
25-Nov-2025