| ADDED : ஜன 21, 2024 04:36 AM
துாத்துக்குடி : துாத்துக்குடியில் செவிலி யர் ஒருவர் எலி கடித்த அலர்ஜியால் பாதிக்கப்பட்டதால், கை, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.துாத்துக்குடி மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் குருவம்மாள், 32; சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். எலி கடித்ததால் உடலில் அலர்ஜி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை. மனமுடைந்தவர் வீட்டில் இருந்தபோது கத்தியால் கை, கழுத்து என, உடலில் தன்னைத் தானே அறுத்துக் கொண்டார். அதிகளவில் ரத்தம் வெளியேறிய நிலையில் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரித்தனர்.