உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காமராஜ் கல்லூரியில் மரம் நடும் விழா

காமராஜ் கல்லூரியில் மரம் நடும் விழா

தூத்துக்குடி : தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. காமராஜ் கல்லூரி என்எஸ்எஸ்., என்சிசி., மற்றும் லார்சன் அண்ட் டர்போ நிறுவனமும் இணைந்து மரம் நடும் விழா காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி செயலாளர் ராஜேந்திரன் மரம் நடும் விழாவிற்கு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். எல் அண்ட் டி நிறுவன மேலாளர்கள் குமரேசன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவ, மாணவிகள் 300 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டினர். இந்த நிகழ்ச்சியில் என்எஸ்எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் மதனகாமராஜ், பானுமதி, பெரியசாமி, டோனி மெல்வின், ஆனந்த ஜோதி, என்சிசி., அதிகாரி ஹெலன் ப்ளோரா, உடற்கல்வி இயக்குநர் பாலசிங், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், அலுவலக கண்காணிப்பாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை