உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.,பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மன்ற துவக்க விழா

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.,பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மன்ற துவக்க விழா

நாசரேத் : நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் பல்வேறு துறைகள் சார்பில் மாணவர்கள் மன்ற துவக்க விழாக்கள் நடந்தது. நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி இன்பார்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய துறைகள் சார்பில் தனித்தனியாக மாணவர் மன்ற துவக்க விழாக்கள் நடந்தது. அனைத்து விழாக்களுக்கும் கல்லூரி தாளாளர் லேவிஅசோக் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், முதல்வர் ஜெயக்குமார், பர்சார் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்பார்மேஷன் டெக்னாலஜி துறை மாணவர் மன்ற துவக்க விழாவிற்கு துறைத்தலைவி (பொறுப்பு) பிரேமா வரவேற்றார். சென்னை டி.சி.எஸ். சாப்ட்வேர் நிறுவன அதிகாரி தீட்சித் கலந்து கொண்டு பேசினார். எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை மாணவர் மன்ற துவக்க விழாவில் துறைத்தலைவி ஜேஸ்மின்சேவியர் வரவேற்றார். திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் பால்கனி கலந்து கொண்டு பேசினார். கம்ப்யூட்டர் துறை மாணவர் மன்ற துவக்க விழாவில் துறைத் தலைவி பிரேமா வரவேற்றார். சென்னை வீ.இ. டெக்னாலஜி பிராஜக்ட் மேலாளர் பழனிவேல் கலந்து கொண்டு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை