உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / எட்டயபுரம் தெப்பக்குளத்திற்கு மழைநீர் வர நடவடிக்கை தேவை

எட்டயபுரம் தெப்பக்குளத்திற்கு மழைநீர் வர நடவடிக்கை தேவை

எட்டயபுரம்:எட்டயபுரம் குடிநீர் தெப்பக்குளத்திற்கு பாண்டியன் நாயக்கர் கண்மாயிலிருந்து மழைநீர் வருவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எட்டயபுரம் தாலுகா குழு வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து எட்டயபுரம் தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தாலுகா தலைவர் ரெங்கசாமி, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எட்டயபுரம் டவுன் பஞ்.,குட்பட்ட குடிநீர் தெப்பக்குளத்திற்கு மழைக் காலங்களில் பாண்டியன்நாயக்கர் பெருகும் தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி பழுதடைந்த நீர்வரத்து குழாய்களை பழுதுநீக்கம் செய்து வரும் மழைகாலத்திற்குள் செப்பனிட்டு தண்ணீர் வரத்திற்கு ஏற்பாடு செய்து தரும்படி கலெக்டரிடம் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எட்டயபுரம் டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி கூறியதாவது, எட்டயபுரம் தாசில்தார் சர்வே செய்து ஆக்ரமிப்புகளை அகற்றித்தந்தால் பாண்டியன்நாயக்கர் கண்மாயிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்து தருவதாக பதில் அளித்துள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் தாசில்தாரை சந்தித்து ஆக்ரமிப்புகளை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை