உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

உடன்குடி:உடன்குடி தேரியூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழு, திருச்செந்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் தேரியூரில் நடந்தது. திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், திருச்செந்தூர் முதன்மை மாவட்ட மாஜிஸ்திரேட் ப்ரீதா தலைமை வகித்து மக்கள் நீதிமன்றம் செயல்பாடுகள், அதன் மூலம் தீர்வு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் வட்ட சட்ட பணிகள் கிராம மக்களை சென்றடைவது பற்றியும், அதன் மூலம் பரிகாரம் கிடைக்கப்பெற்ற வழக்குகள் பற்றியும் விரிவாக பேசினார். தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவரும், மக்கள் நீதிமன்ற உறுப்பினருமான மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாவட்ட சட்ட ஆலோசகர் வக்கீல் சாத்ராக் குற்றவியல் சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம் பற்றி பேசினார். வக்கீல் கிறிஸ்டோபர் ஜெயராஜ் உரிமையியல் சட்டம் பற்றியும், மக்கள் நீதிமன்ற உறுப்பினர் மோகனசுந்தரம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றியும் பேசினர். இதில் வக்கீல்கள் எட்வர்ட், குருராமன், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மெஞ்ஞானபுரம் நகர ஆலோசகர் ஜோசப், ஓய்வு பெற்ற ஆசிரியர் சாமுவேல், உடன்குடி ஒன்றிய செயலாளர் மகாராஜன், உடன்குடி நகர செயலாளர் ஜெபராஜ் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொது மக்களிடமிருந்து சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத அரசு மூலம் பொது நலத்திட்ட உதவிக்கான மனுக்களை திருச்செந்தூர் முதன்மை மாவட்ட உரிமையியல் மாஜிஸ்திரேட் ப்ரீதா பெற்றுக் கொண்டார். இறுதியில் வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை