| ADDED : ஜன 17, 2024 01:20 PM
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே, தனியார் நிறுவன ஊழியர் வீட்டில், 5 லட்சம் ரூபாய் திருடு போய் உள்ளது. திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, புள்ளானேரியை சேர்ந்தவர் செல்வம், 55; கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா, இரு மகன்களுடன், புள்ளானேரியில் உள்ள சொந்த வீட்டில் வசிக்கிறார். பொங்கல் விடுமுறைக்கு வந்த செல்வம், நேற்று முன்தினம் தன் குடும்பத்துடன் அருகே உள்ள கோவிலிற்கு சென்று, பொங்கல் வைத்து வழிபட்டார். பின்னர் அன்றிரவு, 8:00 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவை உடைக்கப்பட்டு அருகிலிருந்த, 6 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.