உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துரிதமாக செயல்பட்ட போலீசுக்கு "ரிவார்டு

துரிதமாக செயல்பட்ட போலீசுக்கு "ரிவார்டு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்களில், குற்றவாளிகளை பிடிக்க துரிதமாக செயல்பட்ட 40 போலீசாருக்கு, எஸ்.பி., 'ரிவார்டு' வழங்கினார்.குற்றத்தடுப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அளவில் கடந்த மாதம் நடந்த குற்றங்கள்; கண்டறியப்பட்ட வழக்குகள்; குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வழக்குகள்; விசாரணையில் உள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பழங்குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் மாவட்ட அளவில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது; கடந்த மாதத்தில் நடந்த குற்றச்சம்பவங்களில், வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 40 பேருக்கு, எஸ்.பி., பாலகிருஷ்ணன் 'ரிவார்டு' வழங்கினார். அதைத்தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, போக்குவரத்து, விபத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை